Herberge für Frauen
நீங்கள் வீட்டு வன்முறையால்அச்சுறுத்தப்படுகிறீர்களா அல்லது பாதிக்கப்படுகிறீர்களா, இதனால் வீட்டிலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா? நீங்கள் அவசர சூழ்நிலைமையில் இருக்கிறீர்களா? உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் தற்காலிகமாக தங்குமிடம் தேவையா?
உங்கள் தேசிய இனம்ää சமயம் அல்லது உங்கள் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்வோம். பெருமளவாக 6 மாதங்களுக்கு உங்களுக்கு பாதுகாப்பான இடவசதி தருவோம். உங்களுக்குத் தனியாக ஒரு அறை கிடைக்கும.; மற்ற பெண்களுடன் பொது அறைகளை உபயோகிப்பீர்கள். வருங்கால அம்சங்களை தெளிவு படுத்த உங்களுக்கு நேரம் இருக்கும். இதற்கு மேல் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பற்றி அறிவிக்கவும்ää ஆலோசனை கூறவும்ää ஊக்கமளிக்கவும் திறமைவாய்ந்த பெண் பணியாளர் உளர். உங்கள் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கவும்ää குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியுள்ள ஆலோசனை மையங்கள்ää அலுவலகங்கள்ää மருத்துவர்ää வக்கீல்கள்ää போன்றவர்களை அணுக உங்கள் தேவைகளைப் பற்றி கற்பிப்பதிலும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அவசியமானால்ää விடுதியில் தங்குவதற்கான பண விவகாரங்களைப்பற்றி உங்களுக்குத் தெளிவு படுத்துவோம்.
முழு வயது அடையாத பெண்களையும் குடிப்பழக்கத்திற்கும் போதைப்பொருட்களுக்கும் அடிமையானவர்களையும் அதே போன்று சுகவீனம் அல்லது உடல்குறைபாட்டால் வெளியிலிருந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களையும் நாங்கள் எடுக்க முடியாது.