நீங்கள் ஒரு நெருக்கடி நிலையிலிருந்து தற்காலிக வீடோ பாதுகாப்பிடமோ தேவைப் படுகிறதா?
- எந்த நேரத்திலும் பதிவுகள் சாத்தியமாகும்.
- பாதுகாப்புக் காரணங்களுக்காக, பெண்களுக்கான விடுதியின் அமைவிடம் இரகசியமாக வைக்கப்படுகிறது, அதற்கு ஒரு அஞ்சல் முகவரி உள்ளது.
- முடிந்தால், உங்களுக்கு மிக முக்கியமான ஆவணங்கள் (அடையாள அட்டைகள், வங்கி அட்டை), உங்களுக்குத் தேவையான மருந்துகள், உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பொம்மைகள் மற்றும் பள்ளிப் பொருட்கள் மற்றும் குடியிருப்பின் சாவி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வரலாம்.
- தொழில்முறை இரகசியத்தின் கடமையின் கீழ் பெண்கள் தங்கும் விடுதி ஊழியர்களும் உட்பட்டுள்ளனர்.
முழு வயது அடையாத பெண்களையும் குடிப்பழக்கத்திற்கும் போதைப்பொருட்களுக்கும் அடிமையானவர்களையும் அதே போன்று சுகவீனம் அல்லது உடல்குறைபாட்டால் வெளியிலிருந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களையும் நாங்கள் எடுக்க முடியாது.